]]>

Breaking News

தங்கை பிறந்தநாள் கவிதை




தொலைதூர நிலவே
தொலையாத உறவே
திரையில்லா மனமே 
திரை கடலாய் குணமே

பெண்ணே உன்னழகை
பல நூறு கலை தேறி
பின்னே படைத்தானோ
பரமத்தின் சதுர் தலையன் 

அண்ணன் யான்! 
உனை எண்ணி சொல்லும் 
சொல் இது!! 

நித்திலத்து முத்தொழியாய் 
புத்தொளி புதுபேரொளியாய்
எத்திசையும் ஏகி நிற்கும் சித்தன், 
சிவபாலன், பல நூறு வினை 
மாய்க்கும் மயில் வீரன் 
அப்பன் அவன் அருள் பெற்று.
 என்றும் இளம் பெண்ணாய் 
ஈரெட்டு செல்வம் பெற்று 
பெரும் வாழ்வு வாழ்
என்று வாழ்த்துவேன்..

- மலர் கொத்தி



இக்கவிதை தங்கையின் பிறந்தநாளிற்கான வாழ்த்து கவிதை. சிறந்த கவிதை  தங்கையின் கவிதை என்று நான் நினைக்கின்றேன். இந்த கவிதை வசித்து உங்களுக்குநீங்கள் கூற விரும்பும் கருத்தை இங்கே பதிவிடவும். 

மேலும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதனால் இத்தளம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் 

நற்செய்தி : விரைவில் கவிதைகளுக்கு என்று தனியாக ஒரு இணையதள வானொலி நிறுவ உள்ளோம்

பிறந்தநாள் 

கருத்துகள் இல்லை