]]>

Breaking News

என்னோடு யார் | உறவுகள் கவிதை | மலர் கொத்தி


🌊🌊🌊🌊🌊🌊🌊

என்னோடு யார்
என்னைத் தவிர?

கண்னுக்கு எட்டிய தூரம் வரை
தேடி தேடி பார்க்கிறேன்
எவரும் இல்லை என்னோடு!

நினைவுக்கு எட்டிய வரை
நினைவு கூர்ந்து பார்க்கிறேன்
எவரும் இல்லை எனக்கென்று!

எனக்கான உறவுகள்!
அலைகள் போல!

அவ்வப்போது வரும்
காலுரசி களிப்பூட்டும்   
கனநேரம்  உறவாடும்
மறுபடியும் கடலுள் ஓடும் 

கடலாடி அலையாகி 
மற்றோர் கால் உரசி 
மகிழ்வித்தே அது மனதாரும்
 ..
ஆனால் நான் அதே கரையில் 
அனாதையாய் 

நிலையிலா அலைகளால் 
நீண்டு கொண்டு இருக்கிறது 
என் உறவு பட்டியலின் நீளம் 

கரை வரும் அலைகள் 
கன நேர சொந்தமென அறியாது 
வந்த அலைகளை வாழ்கையென  
எண்ணிய பிழை என்னுடையது 

என்னோடு யார்! என்னைத் தவிர?

பரிதாபம் பார்த்தோ!
அல்லது  என்னை 
பரிதாபமாய் பார்க்கவோ! 
ஆண்டவன் அனுப்பிக் 
கொண்டுதான் இருக்கிறான் 

வெவ்வேறு திசையில்!
வெவ்வேறு விசையில்!
புதுப்புது அலைகள் !

கால் தழுவி காணாமல்
போனது சில இச்சை அலைகள் ..

கடலுக்குள் இழுத்து விட்டு 
கைகொட்டி சிரித்தன சில 
வக்கிர அலைகள் ..

கடல் விட்டு வந்தேன்
இனி காலமெல்லாம் 
உன் காலுரசி திரிவேன்
என காட்சி பொய் சொன்ன 
பிம்ப பிழைகளும் சில..

அவ்வப்போது அலைகள் 
வந்து போவதால் அனாதை 
பட்டியலிலும் அங்கீகாரம் 
இல்லாமல் போனதெனக்கு 

அத்தனையும் கடந்தும் 
அடுத்த அலைக்கு
காத்திருக்கிறது மனம்..

கரணம்,
உறவுகள்  எனக்கு பிடித்தம் 
என் தோழமையோ 
தனிமைக்கும் பிடித்தம்!

என்னோடு யார்! என்னை தவிர!
தற்காலிக தனிமையில் நான் 
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
                
        ........- மலர்கொத்தி 



கருத்துகள் இல்லை