]]>

Breaking News

நான் சிங்கப்பெண்ணே | Love Motivation Kavithai | Malar Kothi



எனை விட்டு சென்றவனே!
எங்கோ ஓர் மூலையில்
இன்றும் இருக்கிறாய் நீ!!

அருகாமை என்னும் வார்த்தை,
அர்த்தம் இழக்கிற தூரத்திலும்..
என் நினைவு செதில்கள் மத்தியில்
நினைவுகளில் ஒரு ஒன்றுமாய்
இன்றும் இருக்கிறாய் நீ!'

இருந்து விட்டு போ!!

இப்படியும் இழிவு மனிதர்கள்
இவ்வுலகில் உண்டு என்பதை  
எடுத்துக்காட்ட,  என்னுள் 
இருந்து விட்டு போ..

உன் அரிதார காதலில் 
அழிந்து போனதெல்லாம்..
கனவு இறகுகளால் நான்
கட்டமைத்த என்
இலட்சிய சிறகென்பதை 
நினைவுகூற 
நீ என் நினைவில்
இருந்து விட்டு போ..

உன் பசப்பு வானம் தூரிய
சிரிப்பு சாரலில், சிதைந்த போனது
 என் சிங்கார கனவென்பதை
எடுத்து கூற, நீ என்னுள் 
இருந்து விட்டு போ!!

கைவிடல் இனிதோ? கொடிதோ?
ஆனால் கைவிடப்படல்?
கொடிதியிலும் கொடிதென்பதை
அறியவைத்த உன் அன்பிற்கு
மிக்க நன்றி..

உன்னை. மறப்பேனோ என்று
மட்டும் கவலை கொள்ளாதே
நொடிமுள் காதலனே!

நீ எறிந்த அவமான கற்களில் தான்
அடித்தளமிட்டு கட்டுகிறேன்
என் வெற்றிப்பாதையை..

ஆகையால்
நிச்சயம் நீ என் கால்களுக்கு கீழ்
நினைவு துசியாய் நீடித்திருப்பாய்...

அவப்பெயர் அளித்து அவசரமாய்
என்னை விட்டு பறந்த நீ, தற்போது?
என்ன செய்து கொண்டிருப்பாய்?

அன்று என்மேல் அடித்து ஊற்றிய
அதே அன்பு மழையை, 
இன்று எங்கோ ஒரு நிலத்தில் 
ஏகாந்தமாய் பொழிவாய்..!

அதில் விளைவது எல்லாம்
உன் வினை பயன் என்றரி!
 
நீ ஏதோ செய்து விட்டு போ..
எனக்கது பணியும் இல்லை
இனி உந்தன் பிணியும் இல்லை..
 
இதுவரைகாதல் கனவில்
நடை போட்டு என் கால்கள்,
உன் நிழலையும் வெறுத்து
நிஜங்களில் பயணிக்க போகிறது.

தோல்வி கண்டு துவண்டு போக
மழைக்கு வலை தேடும் நண்டல்ல நான்..
எத்துணை துயர் வரினும் எதிர்கொண்டு
கர்ஜிக்கும் சிங்க பெண்ண நான்.

இதோ
கழட்டி எறிந்த என் லட்சிய சிறகுகளை
கண்டெடுத்து பொருத்திக் கொண்டேன்..
அட்சர பிழையின்றி வெற்றியை
உச்சரித்தபடி என் லட்சிய பயணம்.
நான் நிச்சயித்து விட்டேன்.

முடிவாய் ஒன்று கேள்!!
இங்கே காதல் பிழையல்ல
உன் போல் சில காதலர்கள் பிழை
ஒருவேளை எதிர்காலம்
எனக்கோர் காதல் கொண்டு வந்து
என் கைகளில் சேர்த்தால்
நிச்சயம் ஏற்பேன் நான்..

ஆனால்
அட்டைபடம் ரசித்துவிட்டு
அடுத்த புத்தகம் தீண்டும்
உன் போன்றவன் கைகளில் 
சேராது என் காதல்

விழிமொழிகளில் என் வலி அறிகிறவனாய்
நான் பேசும் வார்த்தைகளுக்கு
என் அகராதியில் பொருள் புரிகிறவனாய்
என் லட்சிய பாதையில் ஒளி பொருத்தி
இரு கைகளை இறுக கை பற்றி
இறக்கும் வரை பயணிக்கிற
இதயம் படைத்த ஒருவனின்
உள்ளதோடு உயிர் பிண்ணுவேன்


இக்கடிதம் எழுதும் நேரம்
உனக்காக நான் செய்யும்
காலவிராயத்தின் கடைசி நொடி..
முற்றுப்புள்ளி வைக்கும்
முடிவான என் கண்ணீர் துளி ..
நான் சிங்க பெண்..

எழுத்து - மலர் கொத்தி



ஆசிரியர் உரை : ஒரு தவறான காதலில் நமக்கு ஏற்படும் அனுபவம் நம் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இக்கவிதை.. பெண் மாபெரும் சக்தி

கருத்துகள் இல்லை