உமிழில் உய்த்த உயிர் | Malar Kothi
நாணம் புறத்தே வீசி
நலினமினி எதற்கென ஏசி
அச்சம் மடம் எல்லாம்
வீண் என்று
விட்டொழித்த வினையால்
விரகத்தின் உச்சிக்கு
விரைந்தோடியவள்.
தன் வறண்ட வாய் வாயிலின்
இதற் கதவை இவன் பால் ஈந்து
இனி நான் பிழைக்க வழியாய்
இனிக்கும் இதழ்பிரித்து தா!
ஊரும் உன் உமிழ் நதி உறிஞ்சியெனும்
உயிர் உய்ப்பேன் யானினியென
வாழும் வரம் கேட்டு வாடினால் வஞ்சி
அணுங்கி சிணுங்கி அவனுக்கே
தன்னை தானமிட்டதாய் பிதற்றி-பின்
மன்னவன் சொன்னபடி அவன்
மடியினிற் படர்ந்தாள்
தான் தானாய் அல்லாது
தலைவனான பாவை!
எழுத்து : மலர் கொத்தி
சூழல் : விரக தாபம், இது காதல் கவிதை, தலைவன் தலைவி கூடல், நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் கணவன் மனைவி இடையே வரும் காதல் மென்மையான ஸ்பரிசம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களின் கருத்து இன்னும் வளப்படுத்தும் இந்த வலைத்தலைத்தை
கருத்துகள் இல்லை