]]>

Breaking News

ஹைக்கூ கவிதைகள் -2 | கவியாழினி



தொலையாத நினைவுகளில் 

தொலைந்த உன் முகத்தை 

தொலை யாமல் தொலைக்கிறேன் 

தொலைந்து ம் தொலை யாமல் 

தொலைந்து வாழ்கிறேன்......


கிறுக்கல்கள் இல்லா கிறுக்கல்களில் 

கிறுக்கித் தள்ளுகிறேன் 

கிறுக்கிய கிறுக்கல்கள் 

கிறுக்கல்கள் ஆகட்டும் என்று.....


எனது நாட்குறிப்பில் 

உனது பெயரை மட்டும்,

பத்திரமாக; 

எழுத மறந்து இருக்கிறேன் 

நம் நினைவில்.....


தீராத தேவைகளில் 

தீராத ஆசைகளை 

தீராது தேடுகிறேன் 

தீராத பாதையில் 

தீராத பயணமாய்....


திறக்கப்படாத கதவுகள்

பின்னே  திறப்பின் 

திறந்த வெளிப்பாதையில் 

பயணங்கள் தொடர 

வரம் ஒன்று கேட்பேன் 

வானவனிடம் கையேந்தி...


வழக்கமான பாதைகளில் 

எங்கோ நான்... 

எவளோ போல் இருந்தேன்.... 

இங்கோ நான்... 

இவள் தானா...? 

என்ற சந்தேகத்தோடு 

வழக்கமான பாதைகளில் 

யாரோவாக இன்று.




கருத்துகள் இல்லை