]]>

Breaking News

ஹைக்கூ கவிதைகள் | கவியாழினி




மனதோடு பேச ஒரு 
உண்மையான உறவு 
இல்லை எனில் 
மண்ணில் பிறந்தது வீணாகும் 
மனிதனாக


உண்மையான உறவுக்கு 
அன்பு காட்ட தெரியாத எவரும் 
உண்மையானவர்களாக இருந்தாலும் 
ஒரு கல்லிற்கு சமம்


கல்லான மனம் உள்ளவர்களை 
கரைக்கும் அன்பிற்கு வலிமை அதிகம் 
ஆனால் அன்பு காட்டும் 
மனதிற்கு வலி அதிகம் 


அன்பானவர்கள் சொல்வதெல்லாம் 
உண்மை என நம்பும் 
மூடர்கள் இருக்கும் வரை 
ஏமாற்றமும் நம்பிக்கை துரோகமும் 
நிலையாக தான் இருக்கும் 


கோபம் உள்ளவரிடம் அன்பு இருக்கும் 
அதை காட்ட தெரியாது 
அன்பு உள்ளவரிடம் கோபம் இருக்கும் 
அதை காட்ட தெரியாது 


உறவுகள் கொடுக்கும் 
சந்தோஷங்களை விட 
உரிமைகள் தரும் மகிழ்ச்சிக்கு 
மதிப்பு அதிகம் 
அது அனைவரிடமும் அல்ல 
உண்மையான 
காதலுக்கு மட்டுமே உண்டு 






கருத்துகள் இல்லை