அழகு | கவியாழினி
அழகு
🌺🌺🌺
இயற்கைக்கு இனிமை அழகு..!
மனதுக்கு மகிழ்ச்சி அழகு..!
காற்றுகுத் தென்றல் அழகு..!
கடலுக்கு அலை அழகு..!
மலைக்குப் பசுமை அழகு..!
மழைக்கு மேகம் அழகு..!
குழந்தைக்கு மழலை அழகு..!
குமரிக்குப் பருவம் அழகு..!
முதுமைக்கு சிரிப்பு அழகு..!
பூவிற்கு மணம் அழகு..!
புன்னகைக்கு இதழ் அழகு..!
வெற்றிக்கு தோல்வி அழகு..!
வாழ்க்கைக்கு லட்சியம் அழகு..!
நிலவுக்கு இரவு அழகு..!
பகலுக்கு சூரியன் அழகு..! குயிலுக்கு குரல் அழகு..!
மயிலுக்கு தோகை அழகு..!
ஆகாயத்திற்கு நட்சத்திரம் அழகு..!
பூமிக்கு புல்வெளி அழகு..!
கனவுக்கு நினைவு அழகு..!
கற்பனைக்கு கவிதை அழகு..!
காதலுக்கு ஊடல் அழகு..!
நட்பிற்கு உரிமை அழகு..!
கீதம் பாடும் கிளி அழகு...!
கீழ் வானம் சிவப்பு அழகு....!
கும்மிருட்டு கருமை அழகு....!
கூத்தாடும் அருவி அழகு..!
மெல்லிசை தென்றல் அழகு...!
மிதமான காலை அழகு..!
கலைந்தோடும் மேகம் அழகு..!
கவி பாடும் குரல் அழகு..!
கதை பேசும் விழி அழகு..!
கொஞ்சி பேசும் தமிழ் அழகு..!
தமிழ் கொடுக்கும் கவி அழகினும் அழகு..!
✍️கவியாழினி
கருத்துகள் இல்லை