அவனோடு இசையும் மனது | வெண்மதி
ஆரவாரம் இல்லாத
அமைதியான இரவு
மனமெங்கும்
அவன் மதி முகம்
இன்ப ஒளி
நினைக்கையில்!
இடைவிடாது
ஒலிக்கும் எங்கள்
இணைவு பாடலே!
மந்திரமாக
இமை மூடியபடி
இன்னிசை தியானம்!
இதயத்திற்கு
இதம் கூட்டும்
அந்நினைவு
அலைகளுக்கு
ஈடு என்று சொல்ல
இவ்வுலகில்
ஏதுமில்லை!
சற்று தொலைவு தான்!
நான் வசிக்கும்
அவன் இதயத்திற்கும்!
அவன் வசிக்கும்
என் இதயத்திற்கும்!
இடைப்பட்ட தூரம்
சற்று தொலைவு தான்!
இருந்தும் இன்னிசை
கலந்த இவன் குரல்
எனை மயக்கி மயக்கி
ஆழ்நிலை
தூக்கத்திற்குள்
அழைத்து செல்கிறது
என்னை.,
👑வெண்மதி
கருத்துகள் இல்லை