]]>

Breaking News

குறையே நிறை | ஆதிரை


உன் காதல் - என்றும் குறையாகவே இருக்கட்டும்... 

முடியாத காதல் தான் 

தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்கும்....!


உன் காதல் - என்றும் 

மறைவாகவே இருக்கட்டும்... 

கிடைக்காத காதல் தான் 

தொடர்ந்து தேடிக் 

கொண்டேயிருக்கும்...!


உன் காதல் - என்றும் 

மௌனமாகவே இருக்கட்டும்...

பேசாத காதல் தான் 

தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டேயிருக்கும்...!


உன் காதல் - என்றும் 

தொலைவாகவே இருக்கட்டும்...

எட்டாத காதல் தான் 

தொடர்ந்து பற்றிக் கொண்டேயிருக்கும்...!


உன் காதல் - என்றும் 

கைக்கூடாமலே இருக்கட்டும்...

சேராத காதல் தான் 

தொடர்ந்து நெஞ்சில் 

நிலை(னை)த்துக்

கொண்டேயிருக்கும் ...!!


... ஆதிரை....

கருத்துகள் இல்லை