]]>

Breaking News

தனி(வி)த்திருப்பவள் | கவியாழினி


தனி(வி)த்திருப்பவள்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மௌனிக்கப்பட்ட 

இவளின் இதயத்தில் 

ஆயிரம் ஓசைகள்... 


சத்தமற்ற சலங்கை ஒலி.. 

இதம் கொடுக்கும் இன்ப இசை...


பற்றிக்கொள்ள ஆயிரம் விடயங்கள்... 

பழுதுபட்ட இதயம் பரிதவிக்கிறது.., 


ஏற்றுக்கொள்ள மறுத்து... 

இதுவும் துரு பிடித்து விட்டால் 

என்ன செய்வது..? 


இடி விழுந்த இதயத்தில் 

துளிர் விடுவது எப்படி...? 

மனம் மழுங்கி...  மதி மயங்கி.. 

கதியற்று நிற்பதை விட, 


விதி கொடுக்க..  மதிப்படைக்க... 

கவிவடித்து... 

காதலை காதல் செய்ய 

இவள் ஒரு பட்டாம்பூச்சியாய் 

சிறகடிக்கிறாள்...

 

வண்ணங்கள் ஆயிரம் 

அதில் கருமையின் செழுமை... 

இவளுக்கு மட்டுமே உரித்தானது...!


✍️கவியாழினி





கருத்துகள் இல்லை