தொடுதல் தரும் சுகம் | விஞ்ஞானம்
அன்பு நெஞ்சங்களே!! உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.நான் எழுதுகின்ற முதல் கதை இதுதான், எனவே பிழைகள் ஏதேனும் இருப்பின் சுட்டிக் காட்டவும்.
இந்த பூமியை ஆண்டு கொண்டிருப்பது விஞ்ஞானம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஆண்ட்ராய்டு அலைபேசியும் அது அழைத்து வரும் குறுந்செயலி கூட்டமும் நம்மை தேடி போய் மண்டி அடிமை பட வைக்கிறது. இதில் விஞ்ஞாம் வீணாவதை கண்டு வந்த மன குமுறல் தான் இந்த நூல்..
கொட்டி கிடைக்கும் தரவு குப்பைகளில் எத்தனை எத்தனை வைரங்கள் பொதிந்து போனதுவோ. அதில் இப்பதிவு மின்னுகிறதா, கரை கண்டு மறைகிறது என்பது தெரியவில்லை. ஒரு வேலை இந்த வைரம் உங்களின் பயண பாதையில் ஒரு அடி எடுத்து வைக்க போதுமான ஒளி சிந்தினால் கூட மன நிறைவு தான் எனக்கு..
வாருங்கள் நிலை உணர்வோம்
வளர்ந்து வரும் டெக்னாலஜியில் முதன்மை வகிப்பது குறுஞ்செயலிகள் தான். எத்தனை எத்தனை வகையான குறுஞ்செயலிகள்,
- ஆரோக்கிய கையேடு குறுஞ்செயலி
முகநூல், இன்ஸ்டாகிராம், சாட்டிங் ஆப், டேட்டிங் ஆப் என்று பல விதமான குறுஞ்செயலிகளில் கணக்குகளை உருவாக்கி, அத்தனைக்கும் வெல்வேறு பெயர் வைத்து, வெல்வேறு குடும்பங்களை, நட்பு வட்டங்களை, சொந்தங்களை உருவாக்கி அப் அப்பா!! தலை சுற்றுகிறது, இப்படி நாம் கட்டி மேய்ப்பதை விட நம் முன்னோர்கள் சற்று குறைவாக தான் கஷ்டப்பட்டு இருப்பார்கள் பல பிள்ளைகளை பேணி வளர்ப்பதற்கு.
ஏனென்றால், அவர்கள் அத்தனை பேருக்கும் அதே முகத்தை காட்டினார்கள், உண்மையையே போதித்தார்கள், நடந்தும் காட்டினார்கள்,
ஆனால் நாம் என்ன செய்கிறோம்.
யாருக்கு நம் முகம் தெரிய போகிறது, யாருக்கு நம்மை அடையாளம் தெரிய போகிறது என்றும் செய்கின்ற லீலைகள் ஏராளம்.
ஆண் பெண் பேதமின்றி. படித்தவர் படிக்காதவர் பாகுபாடின்றி, உயர்ந்த பதவி வகிப்போர் அல்லது சாதாரண கூலி தொழிலாளி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, அத்தனை ரகத்திலும், அத்தனை விதத்திலும் இந்த சமூக வலை தளத்தை தன் இச்சை பசியாற்றும் அன்ன சத்திரமாக எண்ணி திரிவது தான் சூழ்நிலை.
இன்னும் சிலர் பொருளாதார பயங்களுக்காக இடம் பொருள் பாகுபாடின்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதும், ஐம்பது வயது தாண்டினாலும் ஆதி காலத்து புகைப்படத்தை ப்ரொபைல் பிக் வைத்து சிறு பெண்களை குறி வைப்பதும், இச்சை பேச்சுக்கும், இல்லறத்தில் கிடைக்காத சுகங்களை காணொளியில் குடும்பம் நடத்துவதும்,
இங்கே வெவ்வேறு விதமான மனிதர்களும் வெவ்வேறு விதமான சிந்தனைகளும் கரை ஓடிக் கொண்டிருக்கின்ற அந்த ஆப்பிள் என் வாழ்க்கையின் நகர்வுக்கும் அந்த ஆப்பிற்கும் எத்தனை தொடர்பு இருந்தது என்பதைத்தான் இந்த கவிதையில் நான் குறிப்பிடப் போகிறேன் தொடர்ந்து படியுங்கள்.
வீணாகும் விஞ்ஞானம்
கருத்துகள் இல்லை