]]>

Breaking News

Tamil Annai Kavithai

 


ஆதிகால சிலை !

ஆயுள் கூட போதாது 

அதன் அழகை ரசிக்க!


அச்சிலையின் 

பாதவிரலை ரசித்த ஒருவனுக்கு, 

பக்கத்தில் இருந்த சிலை,

மிக பிரமாண்ட பட்டு தெரிய 

மெய் சிலிர்த்தான் !


அதற்குள்ளாக, 

அடுத்த சிலை விழி மோத,

அதனிலும்  அற்புதமான சிலைஅது!

இப்படி, இதனிலும், அதனிலும்,  

அடுத்து அடுத்து பட்டதும் 

அழகழகான சிலைகள் !


எத்தனை துட்சமாய் பட்டது 

அவன் முதலில் கண்ட சிலை! 

நல்ல வேலை அச்சிலையின் 

முழு அழகை ரசித்திருந்தால் 

கால விரயம் !

மற்ற ரசிப்புகளுக்கான 

நேரம் குறைவாக இருந்திருக்கும் 

என மார் தட்டியபடி வாழ்ந்தவன்! 


கால சக்கரத்திம் 

கடைசி நொடியில்!

பரிசுத்த பிரவாகம் 

கை கிறுக்கலாக

காகிதத்தில் வழிந்து 

மறைந்து போனான் 


 அவன் சந்ததியில் ஒன்று 

சந்தனமாய் மணந்தது 

சான்றோர் பலர் அதிசயித்து  

ஆராய்ச்ச்சி நோக்கில் 

உரசி உரசி பார்த்து 

ஓய்ந்து போனது 



கருத்துகள் இல்லை