தொடுதல் சுகம் பாகம் 1 முதலாம் அம்மு...
முன்னுரை
கோபுரத்தின் கீழ் நின்றாலும் கூட கும்பாபிஷேக நீரில், எத்தனை துளி நம் மீது பட வேண்டுமோ அது மட்டுமே நம் மீது படுமாம். அப்படியாகத்தான் என் மீது பட்ட ஆசிர்வாத துளிகளாய் ஐந்து அம்முக்கள் சுத்தமான அன்பை சொரிந்த உண்டு, அதில் ஒருவர் தான் மகேஸ்வரி மேடம். இன்றளவும் என்னுள் மரியாதையான ஸ்தானத்தில் நிலை கொண்டிருக்கும் அவரின் நினைவை உங்களோடு பகிர்கிறேன்... அவரை தொடர்ந்து மற்ற நான்கு அம்முக்கள் பற்றி சொல்லி முடித்து இவர்கள் அனைவரையும் ஒரு கற்பனை காதல் கதையில் முத்தாக கோர்த்து மிக அழகான நகைச்சுவையும், மனிதர்கள் எப்படி நிறம் மறுக்கிறார்கள் என்பதையும், அதில் அவர்களின் பக்கம் இருக்கிற நியாயங்களையும் சொல்ல நினைக்கிறன்.
இதில் நமக்கு என்ன பெரிய அனுபவம் கிடைத்து விட போகிறது என்று எண்ணுபவர்களுக்காக இதோ இந்த வரிகள்.
நாம் என்றோ எடுத்த முடிவின் எதிர் வினை தான் இன்று நாம் நிலை கொண்டுருக்கும் வாழ்கை தரம். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கதைக்களம்
முதலாம் சந்திப்பு
நான் குறுஞ்செயலியை நிறுவி ஐந்து ஆறு மாதம் ஆனாலும் கூட அந்த வெள்ளிக்கிழமை காலை ஏதோ ஒரு உள்ளுணர்வு அதுவரை பாடல் பாடுவதில் மட்டுமே நாட்டமாக இருந்த எனக்கு சற்று அடுத்தவர்களின் பாடல்களை கேட்கும் ஆர்வம் தோன்றியது.. அப்படி சுற்றி சுற்றிப் பார்த்தபோது ஒரு ஐடி.. அவர் ப்ரோபைல் படம் கவன ஈர்ப்பு செய்தது.. இரண்டு வினாடிகள் அந்த புகைப்படத்தை பார்த்திருப்பேன் பெயர் கூட என்னவென்று கவனிக்கவில்லை.. அவருடைய அரட்டைப் பெட்டியில் சென்று மேடம் எனக்கு ஒரு தோழியாக தங்களால் இருக்க முடியுமா என்று கேட்டேன்.. இன்று வரை இந்த ஒரு கேள்வியை இந்த ஒரு விதத்தில் யாரிடமும் நானும் கேட்டதில்லை அதற்கு முன்னாலும் கேட்டதில்லை.. அதன் பின்பே பெயரைப் பார்த்தேன் உமா ஆம் உமா மேடம் அவர்களை அப்படித்தான் சந்தித்தேன்..
நட்பின் விருட்சம்..
அப்படி ஒரு கேள்வியை முதலாவது குறுஞ்செய்தியாக பதிவிட்டு அவரைப் பற்றி விவரங்கள் படித்தேன் அவர் சேகரித்திருந்த புகைப்படங்களையும் பார்த்தேன்.. நான் முதலாவதாக பார்த்த அந்த புகைப்படம் ஒரு மஞ்சள் நிற புடவை கட்டி சிரித்த முகத்தோடு 32 முழு நிலவுகளை உள்ளடக்கிய வாய் பெட்டகம்.. அத்தனை நிலவின் ஒளியும் அவர்களின் கண்களில் சிந்தியது.. நிச்சயமாக அது அன்பின் மொழி.. அதனால்தான் அவர்களோடு தோழியாக வேண்டும் என்று எண்ணம் உள்ளுணர்வாக தோன்றி என்னை அப்படி பேச வைத்தது என்பதை பின்பு கண்டு கொண்டேன்.. மற்றபடி அவருக்கு பிடித்தமான முருகன் சில வண்ண பூக்களின் புகைப்படங்கள் மற்றும் சாய்பாபா படங்கள் இருந்தன..
காதலுக்கு எதிராக போர் கொடி தூக்கும் கவிதைகள்.. சோக கீதங்கலோ.. துரோகிகளை சாடும் வசனங்களோ.. எப்படி வாழ வேண்டும் எனறுக இரண்டு வரியில் சொல்லித் தரும் மூட வசனங்கள்.. கவிதை என்ற பெயரில் ஆட்டோ வசனங்கள் என்று எதுவும் இல்லை..
அது அவரின் தெளிந்த சிந்தையையும் இதுவரை அவர் மனம் எந்த உறவிலும் சஞ்சலப்படாமல் மிக பரிசுத்தமாக இருப்பதை பறை சாற்றியது..
கருத்துகள் இல்லை