பாடகி ஷாலு வெங்கட் பேட்டி

வணக்கம் பாடகர்களே!

சாதனையாளர்களின் பேட்டி என்பது உடனடி உத்வேகம் தரும் ஒரு யுக்தி. மேலும் நேரடி பேட்டி, காணொளி பேட்டி, சேனல் பேட்டி என்று பலவகை பேட்டி இதுவரை பார்த்து இருப்பீர்கள். உலகின் முதன் அரட்டை பெட்டி பேட்டி நாம் தொடங்கி இருக்கின்றோம். ஸ்டார் மேக்கர், ஸ்மூல் மற்றும் பலதரப்பட்ட பாடகர்களுக்கு தளம் ஏற்படுத்தி கொடுக்கும் குறுஞ்செயலிகளில் நாம் அவர்களின் அரட்டை பெட்டியில் தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்டு அதன் பதில்களை இங்கே பதிவிடுகிறோம்.

அப்படியாக, கடந்த ஏப்ரல் 9, 2025 அன்று ஸ்டார் மேக்கர் குருஞ்செயலியில் தன் பாடல் திறமையால் பலரையும் கவர்ந்த பாடகி மற்றும் பாடல் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டு வரும் திருமதி.ஷாலு வெங்கட் அவர்களின் இசை அனுபவங்களையும். அவர் வழங்கும் அறிவுரைகள் வழிகாட்டுதல் தங்களின் இசை பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்கிற எண்ணத்தோடு இந்த பதிவை பதிவிடுகிறோம். வாருங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.

வணக்கம் சகோ, முதலில் ஒரு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எத்தனையோ தலை சிறந்த பாடகர்கள் இருந்த போதும் என்னை பேட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தமைக்கு தங்களுக்கும் இந்த மீட்அப் ஸ்டேஜ் .காம் வலைதளத்திற்கும் நன்றி.

என்னுடைய சிறு வயதில் எனது அத்தை சினிமா பாடல்களை எப்போதும் பாடி கொண்டே இருப்பார். முறையான பயிற்சி என்று எதுவும் கிடையாது அனாலும் கூட அவ்வளவு அழகாக மனதை வருடும் அவர் பாடும் பாடல்கள். அந்த ஈர்ப்பு என்னையும் பாட தூண்டியது.

சிறுவயதில் மற்றவர்களை போல் இல்லாமல், விளையாடினாள் கூட பாட்டு பாடி தான் விளையாடுவோம். தொடக்க எழுத்தை கூறி பாட்டை படுவது, பிறர் முடிக்கும் எழுத்தில் ஒரு பாடலை எடுத்து படுவது என்று பாடி பாடி பல்வேறு பாடல்கள் பரிச்சயபட்டது. மேலும் ஆண்டு விழா அல்லது ஊர் திருவிழா என்று எங்கெல்லாம் பாட வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே பாடுவேன். இதில் மேடை பயம் போனது உண்மை.
மொத்தத்தில் என்னை ஒரு பாடகியாக நானே பல இடங்களிலும் நிலை நிறுத்தி கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும் .

 இங்கே ஒரு விஷயம் சொல்ல ஆசை படுகிறேன். நான் பத்து வருடங்களுக்கு முன்பாகவே ஸ்மூல் பயன்படுத்தினேன். ஸ்முல் மற்றும் ஸ்டார் மேக்கர் என்று இரண்டுக்கும் வேறுபாடு அதிகம் இருக்கிறது. ஸ்மூல் செயலியில் பணம் கட்டி வி ஐ பி யாக இருந்தால் மட்டுமே தனி பாடல் பட முடியும், ஆனால் ஸ்டார் மேக்கர் பொறுத்தவரை முற்றிலும் இலவசம் அதே சமயம் பல்வேறு சிறப்புகளை கொண்டு உள்ளது. இங்கே யார் வேண்டுமாலும் இணைத்து பாடலாம். பார்ட்டி ரூம் இருக்கிறது அனைவரும் இணைத்து பாடலாம். இங்கே பாடல் போட்டிகள் நடத்த படுகிறது இது போன்று எனக்கு மிகவும் பிடித்தது ஸ்டார் மேக்கர் தான்.
இங்கே பாடியதால். பலரின் நட்பும் என் திறமை பல மடங்கு வளர்ந்தது.

ஆம் ஸ்டார் மேக்கரில் பல குழுக்கள் போட்டிகளை நடத்துகின்றது, பாடகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடத்த படும் நல்ல குழுக்களுக்கு இங்கே இருக்கிறது. அவர்கள் அழைப்பின் பேரில் மட்டும் நான் நடுவராக செல்வதுண்டு.

நல்ல கேள்வி சகோ.. ஒரு நூறு பேர் கலந்து கொள்ள கூடிய போட்டியில் அவர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறுகின்ற பொது இரண்டு விஷயங்கள் நடை பெறுகிறது. முதலில் தன்னம்பிக்கை பிறக்கிறது. இரண்டாவதாக பிறரின் பாடல்களை ஒரே இடத்தில சக திறமைசாலிகளை காண்கின்ற பொழுது நம்மை இன்னும் திறன் கூட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும் பரிசு தொகை சிலருக்கு இசை கற்க உதவியாகவும் இருக்கிறது. மேலும் போட்டிக்கு அவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ளும் போது ஒரு கவனிப்போடு பாடுகிறார்கள். அந்த பண்பு நிச்சயம் அவர்களின் திறனை கூடும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

நிச்சயமாக சொல்லுகிறேன். ஒரு பாடலை முழுமையாக கேட்க வேண்டும். ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள சின்ன சின்ன சந்ததிகள் வார்த்தை உச்சரிப்புகள் தாளம் எப்படி நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து முப்பது முதல் நாற்பது முறை கேட்டால் மட்டுமே ஒரு பாடல் நமது புத்திக்குள் பதியும். அப்பொழுது தான் தன்னிச்சை செயலாக தளங்களை உள் வாங்க முடியும். அடுத்த படியாக சரியான சுருதி தொட்டு பாட வேண்டும். ஒரு பாடல் இசை அமைக்கப்பட்ட சுருதியில் விட்டு நமது வசதிக்காக மாற்றி பாடுகின்ற பொழுது நிச்சயம் அசல் போல் இனிமை இருக்காது. எனவே தொடர்ந்து கேட்ப்பதோடு, கூட சேர்ந்து பாடுவதாலும் எண்பது சதவீதம் அசல் போல் பாடலை பாட முடியும். விடா முயற்சி விஸ்வ விஸ்வரூப வெற்றி.

நன்றி தோழி, நிச்சயம் உங்களுடைய அனுபவங்கள் வளர்ந்து வரும் பாடகர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் என்பதில் ஐயம் இல்ல. வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் இசை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Starmaker Tips &Tricks

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *